Sunday, January 23, 2011

மழைத் துளி

எல்லோரும் பேசினார்கள்
மழைக்காலம் பற்றி ,
மழையின் தன்மை பற்றி,
அதன் பயன்பாடு பற்றி,

ஏனோ யாருக்கும் அக்கறை இல்லை

ஒவ்வொரு மழைத் துளியிலும்
சிறிதளவு வானம்
ஒட்டிக் கொண்டிருப்பதைப் பற்றி ....